தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் தெளிவாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திற்கு ‘தனுஷ் 50’ என படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இதனை அடுத்து இந்த படத்தில் விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.
தற்பொழுது தனுஷ் நடிப்பில் கேப்டன் மிர்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இது முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷின் 50வது படம் புதுக்கோட்டை படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே தனுஷ் புதுக்கோட்டை படத்தில் கொக்கி குமார் என்ற வேடத்தில் நடித்திருந்த நிலையில் அதே கேரக்டரில் தான் நடிக்க இருக்கிறார் எனவும் எனவே புதுக்கோட்டை 2 அல்லது கொக்கி குமார் என டைட்டில் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனை அடுத்து இந்த படத்தின் திரைக்கதையில் செல்வராகவன் உதவி செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தனுஷின் 50வது திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான வை ராஜா வை படத்தில் தனுஷ் கொக்கி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கிளைமாக்ஸ் 0இந்த படத்தில் வரும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே படித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு ரசிகர் மத்தில மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.