தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.இவர் தற்பொழுது கோலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் த கிரேக் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வரும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடுகிறது. அந்த வகையில் தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய திரைப்படம் அசுரன். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல திரைப்பிரபலங்கள் மாரிசெல்வராஜை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.
இவ்வாறு வெற்றி பெற்ற கர்ணன் மற்றும் அசுரன் இரண்டு திரைப்படங்கலையுமே எஸ் கலைப்புலி தாணு தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் கிட்டத்தட்ட ஐந்து திரைப் படங்களுக்கு மேல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் தனுஷ் நடித்திருந்த திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படங்கள் தமிழகத்தில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது லிஸ்டை தற்போது பார்ப்போம்.
1.கர்ணன்
2.அசுரன்
3.வடசென்னை
4.VIP
5.அனேகன்
இந்த ஐந்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.