தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் இறுதியாக கர்ணன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் மீண்டும் மாரிசெல்வராஜ் கை கொடுத்துள்ளார். அந்தவகையில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் தொடங்க உள்ளது.
இந்நிலையில் தனுஷ் தற்பொழுது ஹோலிவுட்டில் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை உலகப் புகழ்ப்பெற்ற அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் தயாரிக்கிறார்கள். இத்திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இத்திரைப் படத்தில் நடித்து முடித்த பிறகு தனுஷ் மூன்று வருடங்களுக்கு 9 திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இந்நிலையில் தற்போது தனுஷை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தற்பொழுது சினிமாவில் கொடிகட்டி பறந்தது வந்aதாலும் இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையாம். இவருக்கு சமையலின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு பட்டம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.
ஆனால், தனுஷின் அண்ணன் சும்மா இல்லாமல் தனுஷிடம் தம்பி நீ சினிமாவிற்கு வா நான் உன்னை சினிமாவில் உயர்த்தி விடுகிறேன் என்று நம்பிக்கை கொடுத்தாராம் அதனால் தான் தனுஷ் சினிமாவிற்கு நடிக்க ஆரம்பித்தாராம். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.