இப்பொழுதைய காலகட்டத்தில் சினிமா உலகில் கால் தடம் பதிக்க அழகும், சற்று திறமையும் இருந்தால் போதும் அழகாக உள்ளே நுழைய முடியும். அந்த வகையில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்த ப்ரியா பவானி சங்கருக்கு அப்பொழுதே ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
அந்த காரணத்தினால் விபரம் வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். ஒருவகையில் அதுவும் அமைந்தது மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார் அதன்பின் நடிகை பிரியா பவானி சங்கர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சுமாரான வெற்றியை ருசித்தது.
தற்போது வாய்ப்புகள் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த வருடத்தின் மட்டுமே சுமார் 50 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். சொல்லப்போனால் டாப் நடிகைகள் கூட இவ்வளவு படங்களை வைத்து இருந்தது கிடையாது ஆனால் சைலண்டாக இருந்துகொண்டு பட வாய்ப்பை அள்ளுகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
சினிமா உலகில் நடிப்பதையும் தாண்டி நடிகை பிரியா பவானி சங்கர் தனது ரசிகர்களை கவர்ந்து இழுக்க சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசுவது மற்றும் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி அண்மையில் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர் ஒருவர் சர்ச்சையான கேள்விகளை கேட்க பிரிய பவனி சங்கர் அதிரடியான பதில்களை கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சில நல்ல ரசிகர்கள் நல்ல கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறீர்கள் என கேட்ட ப்ரியா பவனி சங்கர் வெற்றிமாறன் என பதிலளித்தார். நான் வெற்றிமாறன் திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் எனவும் தெரிவித்தார்.
வெற்றிமாறன் யதார்த்தமான படங்களை கொடுத்து அசத்துகிறார் அவரது படங்களும் விருதுகளை அள்ளிய அசத்துகின்றன இதனால் நடிகர் நடிகைகள் போட்டி போடுகின்றனர் அந்தவகையில் பிரியா பவானி சங்கரும் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ரொம்ப எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம்.