தனுஷ் நடிப்பில் விரைவில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார் அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் கர்ணன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக டப்பிங் வேலையைத் தொடங்கினார்கள்.
தற்போது டப்பிங் வேலைகள் முடிவடைந்த நிலையில் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கர்ணன் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் படத்தின் பிரமோஷன் வேலைகளை தொடங்கியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் இறுதிக்கட்ட வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் திரைப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் திரைப்படம் வெற்றியடைந்ததால் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
தற்போது படக்குழுவினர் புரமோஷனுக்காக படத்தை பற்றிய தகவல்களை ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் கர்ணன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது அந்த போஸ்டரில் தனுஷ் கையில் விலங்குடன் கொலைவெறியுடன் பார்க்கிறார் முகத்தில் ரத்தக் கறைகள் அதிகமாக இருக்கிறது. இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது திரைப்படம் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கர்ணன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள் படக்குழு. அதாவது கர்ணன் திரைப்படம் ஒன்பதாம் தேதி ஏப்பரல் மாதம் 2021 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.