இயக்குனர் விக்னேஷ் சிவனை எச்சரித்த தனுஷ் – கணவருக்காக உதவி செய்த நயன்தாரா.!

nayanthar
nayanthar

இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் இப்பொழுது கூட இவர் நடிகர் அஜித்தை வைத்து AK 62 படத்தை எடுக்க உள்ளார். சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவர் தற்பொழுது நிஜ வாழ்க்கை விக்னேஷ் சிவன் செம்ம சந்தோஷமாக இருக்கிறார்.

காரணம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். இவர்கள் இருவரும் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர் பின் அனைவரது முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் தற்பொழுது வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர் படங்கள் வந்தால் அதை சீக்கிரமாக முடித்துவிட்டு கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்க தற்பொழுது வெளிநாடு பக்கம் பறந்து விடுகின்றனர்.

அது போல தற்பொழுது இந்த ஜோடி ஸ்பெயின் நாட்டிற்கு சென்று தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது தொடர்ந்து விக்கி, நயன்தாரா  புகைப்படங்கள் வெளிவந்து அசத்துகின்றன இவர்கள். எப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது  இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் காதலிக்கும் பொழுது சில பிரச்சனைகளும் அப்பொழுது நடந்துள்ளது அது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.

நானும் ரவுடிதான் படத்தில் இவர்கள் காதலிக்க தொடங்கினர் அப்பொழுது படத்தின் சூட்டிங் இழுத்துக் கொண்டே போனது இந்த படத்தை தனுஷ் தயாரித்துக்கொண்டிருந்தார் அப்பொழுது படம் எடுக்க அதிக நாட்கள் ஆனதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு செலவும் அதிகமானது ஒரு கட்டத்தில் கோபமடைந்த தனுஷ்.

விக்னேஷ் சிவனை கூப்பிட்டு  ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அதற்குள் முடிக்குமாறு கூறினார் ஆனால் அந்த தேதியை மீறி படப்பிடிப்பு சென்றதால் ஒரு கட்டத்தில் நயன்தாரா பண உதவி செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. பிறகு அந்த படம் வெளிவந்து சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார்.