தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வராகவன் ஹீரோயின் இல்லாமல் கூட படம் எடுப்பார் ஆனால் தம்பி இல்லாமல் எந்த ஒரு படத்தையும் எடுக்காமல் இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தம்பியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி தற்பொழுது ஹாலிவுட் பாலிவுட் என சினிமாவில் கலக்க வைத்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய தம்பி தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து படங்களையும் இயக்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புதுக்கோட்டை இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் நடிக்கும் பொழுது செல்வராகவன் ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என கூறுகிறாரோ அதை முழுமையாக எடுத்துக் கொண்டு ஒரு இன்ச் கூட மாறாமல் நடிகர் தனுஷ் நடிப்பாராம். செல்வராகவன் நடித்த 10 சதவீதம் தான் தனுஷ் படத்தில் நடித்திருக்கிறாராம். மேலும் தனுசுக்கு புதுக்கோட்டை படத்தில் நடிப்பதற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம் சுள்ளான் மாதிரி இருக்கிற என்னை டானாக நடிக்க வச்சார். அந்த எதிரிகளை அழிப்பதற்காக சுல்லா மாதிரி இருக்க என்னையா இதில் நடிக்க வைக்கிறீர்கள் என தனுஷ் வேண்டாம் என மறுத்து விட்டாராம்.
இதன் காரணமாக பாலகுமாரன் அவர்கள் தனுஷை அழைத்து ஏன் செல்வராகவனோடு இணைந்து நடிக்க மறுக்கிறீர்கள் என கேட்டாராம். மேலும் சினிமாவில் இருப்பவர்களை பார்த்தியா கடுகு சிறுசாக இருந்தாலும் காரம் பெருசு அம்மா தூண்டு இருப்பவர்களும் சாதிக்க முடியும் என தைரியம் கொடுத்தாராம். அதன் பிறகு தான் தன்னுடைய உடல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒப்புக் கொண்டாராம் நடிகர் தனுஷ்.
மேலும் சமீப காலங்களாக புதுக்கோட்டை படத்தின் இரண்டாவது பாகம் பற்றி தகவல் வெளியாகி வரும் நிலையில் விரைவில் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.