பிளாக்பஸ்டர் கதையை தவறவிட்ட தனுஷ் சரியாக பயன்படுத்திக் கொண்ட கார்த்தி எந்த படம் தெரியுமா.?

karthi-dhanush
karthi-dhanush

ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் முதலாவதாக வாத்தி திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிரபல இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம் எடுக்க உள்ளனர்

என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது திரையுலகில் நடிகர் தனுஷ் எத்தனையோ படங்களை தவற விட்டு உள்ளார் அதில் ஒரு சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன .

அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 ல் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தானாம் சில காரணங்களால் அவர் அந்த படத்தை தவறவிடவே கார்த்தி நடித்தார்

அவருடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், காஜல் அகர்வால், சூரி, நீலிமா ராணி, மகேந்திரன், வைரவன் போன்ற பலர் நடித்திருந்தனர். படம் வெற்றி பெற்ற பிறகு தான் இப்படி பட்ட திரைப்படத்தை தவற விட்டுவிட்டோமே என ரொம்ப வருத்தப்பட்டாராம். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.