நடிகர் தனுஷ் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் கூட விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கி நடித்துள்ளார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. ரசிகர்கள் பலரும் இந்த படமும் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என கூறி வருகின்றன. காரணம் செல்வராகவனும் தனுஷும் இணையும் படம் எப்பொழுதுமே வெற்றி படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புதுப்பேட்டை இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சோனியா அகர்வால், சினேகா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க முதலில் தயங்கினார் என்பதுதான் உண்மை இது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
புதுப்பேட்டை படத்தில் நடிக்க தனுஷ்க்கு சுத்தமாகவே விருப்பம் இல்லையாம் சுள்ளான் மாதிரி இருக்கும் என்னை டான் என்கின்றார்கள். அந்த டானுக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் எதிரிகளை அழிப்பான் என்று ஒல்லியாக இருக்கும் எனக்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுக்கிறீர்கள் என்று புதுப்பேட்டை படத்தில் நடிக்க தனுஷ் மறுத்திருக்கிறார் அப்பொழுது செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய பாலகுமாரன் அவர்கள் தனுஷை அழைத்து எதற்காக இந்த படத்தில் நடிக்கவில்லை என சொல்கிறாய்..
சினிமா துறையில் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்திருக்கிறாயா? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் தம்மா துண்டு இருப்பவர்கள் தான் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என தனுஷுக்கு தைரியம் ஊட்டி உள்ளார்.
அதன் பிறகு தைரியத்தை வரவைத்து தனுஷ் எப்படிப்பட்ட கதாபாத்திரம் வந்தாலும் நடித்து விடலாம் என்ற தைரியம் அவருக்கு வந்ததாம் அதன் பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளில் தனது நடிப்பு திறமையை காட்டி வெற்றிகளை குவித்தாராம்.