பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகர், நடிகைகளின் மீது சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது நடிகர் தனுஷ் நடிகை சாய் பல்லவிவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக தகவல் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான தனுஷ் தொடர்ந்து ஏராளமான முன்னணி இயக்குனர்களில் திரைப்படங்களில் நடித்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
இவ்வாறு இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் இவருடைய புகழ் எட்டு திசைகளிலும் பரவ தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நடித்து வரும் தனுஷ் தற்பொழுது ஹோலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் நடிக்க தனுஷ் தி க்ரே மேன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் பிறகு இதன் மூலம் இவருக்கு தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் கிடைத்தது.
இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் 18 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் எனவே மீண்டும் இவர்கள் சேர்வார்கள் என ஆர்வமுடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இருவரும் தங்களுடைய பணிகளை செய்து. தன்னுடைய மனைவியை பிரிந்ததற்கு பிறகு அனைத்து நடிகைகளுடனும் சவகாசமாக பழகி வருகிறாராம் தனுஷ். இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாக சினிமா வட்டாரங்களில் கிஸ் கிஸ் பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ் தற்பொழுது வாத்து திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது மேலும் இதனை அடுத்து மூன்று தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி உள்ளாராம் அந்த வகையில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி வருவதற்கு காரணம் நடிகை சாய் பல்லவி என கூறப்படுகிறது.
அதாவது நடிகை சாய் பல்லவி தான் தெலுங்கு இயக்குனர்களிடம் பேசி நடிகர் தனுசுக்கு வாய்ப்பு வாங்கி தந்தாராம் எனவே நடிகர் தனுஷ் நடிகை சாய் பல்லவியின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து மாரி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்