பிறந்தநாள் அதுவுமாய் தனியாக ஒதுக்கப்பட்ட தனுஷ் – சோகத்தை மறைக்க அவர் செய்த வேலை என்ன தெரியுமா.?

dhnaush-
dhnaush-

சினிமா உலகில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது முழு திறமையை வெளிக்காட்டி நடிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடித்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் தான். இப்பொழுது கூட சிறந்த இயக்குனர்களுடன் கை கொடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் தனுஷின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டும் என தெரிய வருகிறது. தனுஷ் தற்பொழுது அனைத்து படத்தின் போஸ்டர் மோஷன்காக பிஸியாக சுற்றி திரிந்து வருகிறார்.

சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில்  தற்போது சரிவை சந்தித்துள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். குடும்பத்துடன் சூப்பராக வாழ்ந்து வந்தார் ஆனால் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வர தற்பொழுது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷுக்கு 39 வது பிறந்தநாள். வழக்கம் போல குடும்பத்தினருடன் தனது பிறந்த நாளை ஜாலியாக கொண்டாடும் தனுஷ் நேற்று குடும்பத்தினர் யாரும் இல்லாததால் நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை அதற்கு பதிலாக நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே நானே வருவேன் படங்களின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளுக்காக பிஸியாக வேலை பார்த்தாராம்.

இருப்பினும் ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு சிறந்த அப்டேட்டை கொடுக்க வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு   வாத்தி படத்தின் டீசரை நேற்று படக்குழு வெளியிட்டு அசத்தி உள்ளது. வாத்தி டீசர் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.