மணிரத்தினத்தை பழிவாங்கத் துடிக்கும் தனுஷ்.! இந்த முறை குறி தப்பாது…

mani-ratnam-vs-dhanush
mani-ratnam-vs-dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகி வசூலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

ஏனென்றால் கடந்த மாதம் 30 ஆம் தேதி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தாள் தான் நானே வருவேன் திரைப்படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படமாக அமைந்தது கல்கி நாவலை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது இதனால் பல ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமைந்தது.

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படமும் பொன்னின் செல்வன் திரைப்படம் ஒன்றுடன் ஒன்று மோதியதால் நானே வருவேன் திரைப்படம் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது இதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது இதனால் மறுபடியும் தனுஷ் அவர்கள் மணிரத்தினத்துடன் மோத உள்ளதாக கூறப்படுகிறது இந்த முறை மணிரத்தினத்தை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று போராடி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.இதனால் கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு விருந்து ஒன்று காத்திருக்கின்றது.