தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும், அந்த வகையில் இவர்களின் கூட்டணியில் வெளியாகிய ஆடுகளம் பொல்லாதவன் வடசென்னை அசுரன் ஆகிய திரைப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அசுரன் திரைப்படத்திற்கு பல விருதுகளையும் வாங்கினார்கள்.
இப்படி இவர்களின் கூட்டணியில் உருவாகும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று வருகிறது ஆனால் இவர்கள் கூட்டணியில் உருவாக்கி வந்த திரைப்படம் டிராப் ஆகியுள்ளது இந்த தகவல் தற்பொழுது இணையதளத்தில் லீக் ஆகியுள்ளது, இவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த திரைப்படம் ‘தேசிய நெடுஞ்சாலை’.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருந்தார். அதேபோல் இந்த திரைப்படத்திற்கு நா முத்துக்குமார் தான் பாடல் வரிகளை எழுத இருந்தார். அதன்பிறகு இந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் டிராப் ஆனது. ஆனால் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிட்டுவிட்டார்கள் அதன்பிறகுதான் டிராப் ஆனது.
இந்த பஸ்ட் லூக் போஸ்டர் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
Here Is Poster Of #DesiyaNedunchalai "தேசிய நெடுஞ்சாலை " 2006 Dropped Project of @dhanushkraja Sir, & @VetriMaaran sir,( Before #Polladhavan ) , Music @thisisysr , Ekambaram -DOP, #NaMuthukumar, @VimalaPhanibabu #RKProductions #D44 #JagameThandhiram #Karnan #Dhanush pic.twitter.com/aSSm81sGP1
— RAJA B RAJA (@B_RAJA_) June 8, 2020