பொல்லாதவன் படத்திற்கு முன்பே இணைந்த வெற்றிமாறன் – தனுஷ்.! இணையதளத்தில் வேகம் எடுக்கம் போஸ்டர்.

thanush
thanush

தமிழ் சினிமா உலகில் சிறந்த நடிகர்கள் சிறந்த இயக்குனருடன் கைகோர்க்கும் போது அந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் அந்த வகையில் நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி எப்பொழுதுமே மிகப்பெரிய ஒரு வெற்றி கூட்டணியாக இருந்து வந்துள்ளது இவர்கள் இருவரும் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இணைந்தனர்.

அதன் பிறகு இந்த கூட்டணி ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் இணைந்தது இந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது இதன்மூலம் தனுஷும் சரி வெற்றிமாறனும் சரி சினிமா உலகில் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடித்தனர்

தற்பொழுது இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றவில்லை என்றாலும் வெகு விரைவில் மீண்டும் ஒரு முறை இந்த கூட்டணி இணையும் எனக் கூறப்படுகிறது மேலும் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை இவர்கள் கூட்டணியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்

இப்படி இருக்கின்ற நிலையில் பொல்லாதவன் திரைப்படத்திற்கு முன்பாகவே தனுஷும் வெற்றிமாறனும் இணைய இருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகினார்.

அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகியது பின் சில காரணங்களால் அந்த படம் எடுக்க முடியாமல் நின்று போனது. பிறகு சில வருடங்கள் கழித்து வெற்றி மாறனின் இணை இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உதயம் nh4 என்ற பெயர் மாற்றப்பட்டு படம் ரிலீஸ் ஆனது இந்த படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்தார் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.