வசூலில் பட்டையை கிளப்பும் தனுஷின் “வாத்தி” – 3 நாளில் மட்டுமே இத்தனை கோடியா.?

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க வெங்கி அட்லூரி உடன் கைகோர்த்து  தனுஷ் வாத்தி திரைப்படத்தில் நடித்தார்.

ஒரு வழியாக பல தடைகளை தகர்த்தெறிந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி “வாத்தி” உலகம் முழுவதும் ரிலீசானது. படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, tanikella bharani மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர்.

படம் முழுக்க முழுக்க கல்வி பற்றிய ஒரு படமாக இருந்ததால் அழைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வசூலிலும் எந்த குறையும் இல்லை குறிப்பாக தெலுங்கில் தொடர்ந்து  வாத்தி (சார்) திரைப்படம் அங்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல் மட்டுமே வாத்தி திரைப்படம் உலக அளவில் 10 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. இரண்டாவது நாளிலும் வாத்தி படத்தின் வசூல் அதிகரித்து காணப்பட்டது இப்படி இருக்கின்ற நிலையில் வாத்தி திரைப்படத்தின்  மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே 43 இப்படிக்கு மேல் வசூல் வேட்டை அள்ளி உள்ளவாம்.  2 நாளில் போட்ட காசை அள்ளியதால் இப்பொழுது வருகின்ற காசு எல்லாமே வாத்தி படத்திற்கு லாபம் என சொல்லப்படுகிறது இதனால் நடிகர் தனுஷும் சரி, வாத்தி படக்குழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது.