Dhanush : தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் நடிக்க வந்து போது இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து பெரிய அளவில் வைரலானது இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் படத்தை மிகப் பிரமாண்ட பொருட்டுச் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பருப்பதாகவும் கூறப்படுகின்றன.
இப்படி சினிமாவில் பிஸியாக ஓடும் தனுஷை பற்றி பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சொன்னது தற்பொழுது வைரலாகி வருகிறது. தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக் கொண்டே இருப்பார். அவர்களிடம் நன்றாக வேலையும் வாங்கிக் கொள்வார் குறிப்பாக பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்து காரணமே தனுஷ் தான்.
அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போதே இரவு 12 மணிக்கு தனுஷ் போன் செய்து பேசுவார் இதுதான் அந்த நடிகைக்கும், கணவருக்கும் சண்டை ஏற்பட காரணமாக இருந்தது இந்த சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு கட்டத்தில் இது ஒத்துவராது என்று முடிவெடுத்து இரண்டு பேருமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என ரங்கநாதன் பேசியது பரபரப்பாகி உள்ளது.