நடிகர் தனுஷ் தனது சிறுவயதில் கேட்ட ரிமோட் கார் கிடைக்காத காரணத்தினால் வளர்ந்த பிறகு அவர் செய்திருக்கும் சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவிற்கு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் இதனை அடுத்து சில திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் தனுஷ் மிகவும் ஒல்லியாக ஹீரோ அம்சம் இல்லை என்பதால் பலரும் மோசமான விமர்சனங்களை தந்து வந்தார்கள். ஆனால் அனைத்தையும் எதிர்த்து தற்பொழுது ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட், கோலிவுட் என்று அனைத்திலும் கலக்கி வருகிறார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தனது தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ் அறிமுகமான நிலையில் ஆனால் சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த பொழுதே அவரது மூத்த மகனான செல்வராகவன் கையில் ஒப்படைக்கப்பட்டது.
கஷ்டத்தில் இருக்கும் தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வராகவனோ இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வெளியிட்டார்கள். வெளியான முதல் படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை கொடுத்த நிலையில் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தையும் இயக்கினார். இவ்வாறு இந்த படம் வெற்றி பெற இருவரும் சினிமாவில் வளர தொடங்கினார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வரும் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மிர்ல்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலானது மேலும் இது தான் தனுஷின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது இதனை அடுத்து ஹிந்தி படம் ஒன்றில் தனுஷ் கமிட்டாகியுள்ளார்.
கஸ்தூரி ராஜா இயக்குனராக இருந்தாலும் நடுத்தர குடும்பம் தான் எனவே தனுஷ் சின்ன வயதில் ஆசைப்பட்ட பொருட்கள் மற்றும் தேவையான அளவுகள் கூட கிடைக்காமல் இருந்து வந்துள்ளது அப்படி ஒரு சமயத்தில் தனுஷ் பக்கத்து வீட்டில் இருந்த பையன் ஒருவன் ரிமோட் காரை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த நிலையில் தனுஷ் அந்த பையனிடம் ஒரே ஒரு முறை ரிமோட் காரை வாங்கி அழுத்தி பார்த்துவிட்டு தருவதாக கேட்க ஆனால் அந்த பையன் தர மறுத்திருக்கிறார்.
எனவே இதனை அடுத்து தனது தந்தையிடம் ஒரு ரிமோட் கார் வேண்டும் என கேட்க ஆனால் அப்பொழுது அதன் விலை உயர்வு என்பதனால் கஸ்தூரிராஜா இதனை வாங்கி தர மறுத்துள்ளார் எனவே அப்பொழுது தனுஷ் நானாக வளர்ந்தது சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு உயர் ரகத்தில் ஒரு ஒரிஜினல் காரை வாங்க வேண்டும் என நினைக்க பிறகு சம்பாதிக்க ஆரம்பித்ததும் உயர் ரகத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி தனது வீட்டில் நிறுத்தி வைத்திருக்கிறார்.
ஒருமுறை தனுஷை பார்ப்பதற்காக சென்ற பொழுது சார் இந்த காரை யூஸ் பண்ண மாட்டீங்களா என்று பாலு கேட்காத இருக்கு தனுஷ் சிறுவயதில் நடந்த அந்த ரிமோட் கார் விஷயத்தை சொல்லி இருக்கிறார். அப்பொழுது எடுத்த முடிவு சார் இப்படி ஒரு கார் வாங்கணும்னு அதான் வாங்கி நிறுத்தி வச்சிருக்கேன் இந்த கார் இந்திய சாலையில் ஓட்டுவது கடினம் 500 மீட்டர் போறதுக்குள் 2 லிட்டர் பெட்ரோல காலி பண்ணிடும் என்றார் இவ்வாறு இந்த தகவலை பத்திரிக்கையாளர் சேயர் பாலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.