சினிமா உலகில் ஒரு நடிகர் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்கு உயிர் கொடுத்து அந்தப் படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்று மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விகின்றனர் அதையே தொடர்ந்து செய்வதால் அவரைப் மிகப்பெரிய கூட்டம் பின்பற்றவும் தொடங்குகின்றனர்.
அந்த நடிகர் ஒரு கட்டத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும் கூட ரசிகர்களும் மற்றும் மக்களும் அவருக்காக அந்த படத்தை பார்ப்பவர்கள் அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து தோல்வியை கொடுத்தாலும் கூட ரசிகர்கள் அவரை no.1 இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்கள்.
ஆரை போலவே தனுஷும் சிறப்பம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவரது படங்கள் சுமாராக இருந்தாலும் இவரது நடிப்பு அந்தப் படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் எடுத்துச் செல்கிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான அசுரன், கர்ணன் போன்ற படங்களைத் தொடர்ந்து இவர் நடிப்பில் நேற்று வெளியான ஜெகமே தந்திரம் திரைப்படமும் வேற லெவல் இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது வெளியாகி வெற்றி கண்டு வருகிறது இந்த நிலையில்தான் இந்தப் படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார் தனுஷ்.
அவர் கூறியது : ஜகமே தந்திரம் மற்றும் சுருளி கதாபாத்திரத்தை வழங்கிய கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்குநன்றி தெரிவித்தார் தனுஷ். உங்களுடன் பணிபுரிந்த மற்றும் கொடூரமான கேங்ஸ்டர் சுருளி கதாபாத்திரத்தின் ஒவ்வொரு தருணத்தையும் பார்த்து ரசித்தேன். எல்லா புகழும் உங்களையும் உங்கள் குழுவையே சேரும் எனவும் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் உங்களைப் போலவே நானும் சுருளி கதாபாத்திரத்தை பார்த்தேன் இந்த படம் நீங்கள் இல்லையென்றால் இப்படி வந்து இருக்காது சுருளி கதாபாத்திரம் வேற லெவல் இருந்தது. உங்களுடன் பணிபுரிந்தது மிக சிறப்பாக இருந்தது எனவும் தெரிவித்தார்.