லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருக்கும் தனுஷ்.! வைரலாகும் தகவல்..

vijay-dhanush
vijay-dhanush

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் நடிகர் விஜய் மற்றும் தனுஷ் ஒரே திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது மேலும் விஜய் ஹீரோவாகவும் விஜய்க்கு வில்லனாக தனுஷூம் நடிக்க இருக்கிறாராம் தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.  இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் மேலும் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது விஜய் நடிக்க இருக்கும் 67 படத்தை இயக்கப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.  அந்த வகையில் மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணைய போகிறது என்ற தகவல் விஜயின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் பெரும்பாலும் பேசப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் நடிக்க இருக்கும் 67வது படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகிவுள்ளது.  அதாவது விக்ரம் படத்தில் இடம்பெற்றிருந்த சூர்யாவின் ரோலன்ஸ் கதாபாத்திரத்தைப் போலவே தனுஷுக்கும் ஒரு பவர்ஃபுல்லான வில்லன் வேடத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்துள்ளாராம்.

இவ்வாறு மிகவும் வைரலாகி வரும் நிலையில் இதனைப் பற்றி படக்குழுவினர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.  மேலும் இந்த தகவல் ஒருவேளை உண்மையாக இருந்தால் முதன்முறையாக விஜய்யும் தனுஷ இணைந்து நடிக்கும் முதல் திரைப்படமாக இருக்கும் எனவே இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இருக்கு காத்து வருகின்றனர்.