தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் அனிருத். தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே இசையமைப்பாளர் அனிருத் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர் படங்களுக்கு இசை அமைத்து பிரபலமடைந்தார் இவர் இசையமைத்த படங்களும் அதிரிபுதிரி ஹிட் தான்.
இதனால் இவர் தொடமுடியாத உச்சத்தை எட்டியுள்ளது அதுமட்டுமல்லாமல் ஒரு படத்திற்கு இசையமைக்க பல கோடிகளை வாங்கி ஓடிக் கொண்டிருக்கிறார். சினிமா உலகில் அனிருத்தை அறிமுகப்படுத்தியது என்னவோ தனுஷ்தான் ஏனென்றால் இருவரும் அப்போது அவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர் மேலும் ஒரு வகையில் உறவினரும் கூட என்பதால் அனிருத்துக்கு அதிக பட வாய்ப்பைக் கொடுத்து அழகு பார்த்தார் தனுஷ்.
அனிருத்துக்கு தனுஷ் முதலில் கொடுத்த திரைப்படம் 3 ஆம் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்த பிஐபி, விஐபி-2 போன்ற பல்வேறு படங்களுக்கு இசை அமைத்தார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென சிவகார்த்திகேயன் பக்கம் திரும்பிய தொடர்ந்து அவரது படங்களுக்கு இசை அமைத்து வலம்வந்தார் ஒருகட்டத்தில் தனுஷ்க்கும் – சிவகார்த்திகேயனும் இடையே பிரச்சனை ஏற்பட ஒரு கட்டத்தில் மனம் வருந்தி தனுஷ் என் படங்களுக்கு இனி அனிருத் இசையமைக்க வேண்டாம் என கூறிவிட்டார்.
இதை சரியாக உணர்ந்து கொண்டார் தனுஷ் படத்திற்கு போகாமல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களுக்கு இசை அமைத்தவர். தனுஷ்க்கும்,அனிருத்தும் இடையே பிரச்சினை வர காரணமே சிவகார்த்திகேயன் தான் இருவருக்கும் உள்ள பிரச்சினை ஈகோ தான் காரணம் என சினிமாவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.