தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் முதன்முதலில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.
தனுஷ் அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது தெலுங்கு சினிமாவையும் தாண்டி ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லுரி இயக்கத்தில் தயாராகி வரும் வாத்தி படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் தனுஷ் அவர்கள் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் தனது சகோதரனான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததால் தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
பாலிவுட், கோலிவுட்டை தாண்டி தற்போது ஹாலிவுட்டில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த ஹாலிவுட் திரைப்படத்தை இயக்குனர் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள தி க்ரே மேன் திரைப்படம் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகரான ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தின் பெயர் ஜேக்கப் தி ஹன்டர் என தகவல் வெளியாகியுள்ளது.