சிவகார்த்திகேயனுக்காக மாவீரனில் கடவுளாக மாறிய தனுஷ்.! இது தான் பெரியமனசு..

sivakarthikeyan-
sivakarthikeyan-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கு மாவீரன் திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது இந்த படத்தை மண்டேலா படத்தினை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த வண்ணாரப்பேட்டையில் பாடல் வெளியானது.

இந்த பாடலை சிவகார்த்திகேயன் அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் வெளியான இந்த பாடல் வைரலாக இந்த பாடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள், டிக் டாக் பிரபலங்கள் நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் டிரைலர் இன் சிவகார்த்திகேயன் அடிக்கடி மேலே பார்ப்பார் அதாவது சிவகார்த்திகேயனுக்கு ஏதாவது பிரச்சனை வரும்பொழுது எல்லாம் கடவுள் குரல் போல் ஒரு குரல் கேட்குமாம்.

இது படத்தின் முக்கியமான விஷயம் என்பதால் இந்த குரலுக்காக கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களை அணுகி இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தற்பொழுது படப்பிடிப்பில் இருப்பதால் அவர்களால் இதனை செய்ய முடியவில்லை. இந்நிலையில் தனுஷ் தற்பொழுது குரல் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதனால் கண்டிப்பாக தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை தனுஷ் தயாரித்துள்ளார்.