நடிகர் தனுஷ் சினிமாவில் என்ட்ரியாவதற்கு முன்பு அவரது அப்பா கஸ்தூரிராஜா பிரபல இயக்குனராக திகழ்ந்து வந்தார் மற்றும் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் இயக்குனராக பல படங்களை கொடுத்து வந்தார். இவர்கள் இருவரின் உதவியோடு தான் தனுஷ் சினிமாவில் என்ட்ரி ஆகினார்.
அப்படி முதல் படமாக துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு வந்தார். நடிகர் தனுஷ் ஆரம்பத்தின் பல சருக்கள்களை சந்தித்தாலும் தற்போது உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படங்களின் கதை அம்சமும் சிறப்பாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷின் அப்பா மற்றும் அம்மா இருவரும் தனுஷ் குறித்து பேசிய ஒரு செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவர்கள் பேசியது, தனுஷின் அம்மாவின் செயின் ஒன்று வீட்டில் காணாமல் போனது செயினை அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை பின்பு தனுஷ் சேர்ந்து அந்த செயினை தேடினார்.
ஆனால் கிடைக்கவில்லை பல வருடம் கழித்து தனுஷ் வீட்டில் அந்த செயினை நான் தான் எடுத்தேன் அம்மா எனக் கூறியுள்ளார். இப்படி பலமுறை பலவற்றை எடுத்து வச்சுக்கிட்டு அவரை கூட சேர்ந்த தேடுவாராம் என்று தனுஷின் அம்மா கூறியுள்ளார். இதற்கு தனுஷ் உடன் சேர்ந்து தனது இரண்டாம் மகள் கையால் என காமெடியாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ