தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு உருவான வாத்தி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் ஒரு சில பிரச்சனையின் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது.
அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ள வாத்தி திரைப்படத்தின் மீது தற்போது ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் ஆசிரியர்களை அவமானப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதாவது வாத்தி படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது. அந்த மனுவில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படமான வாத்தி திரைப்படம் விரைவில் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது அதற்கு வாத்தி என்ற பெயரை வைத்துள்ளனர் இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த படத்தை தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியிடுகிறார்கள் தமிழில் மட்டும் தரக்குறைவான கொச்சையான வார்த்தையில் ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் விதமாக வாத்தி என்று பெயரிட்டு வெளியிட உள்ள குழுவினர் தெலுங்கில் மட்டும் சார் என்று பெயரிட்டு இருக்கிறது. உடனடியாக வாத்தி என்ற பெயரை நீக்கி விட்டு “வாத்தியார்” என்று பெயரை வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சார்பாகவும் அமைப்பின் சார்பாகவும் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.