கேப்டன் மிலர் படத்தின் பூஜையை தொடங்கிய தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.

Captain-Miller
Captain-Miller

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும்  வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவர்கள் மேலும் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் அதில் ஒரு திரைப்படம் இந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம்தான் நானே வருவேன் இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்கியுள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் இரண்டு வேடத்தில் நடித்து உள்ளார். கிட்ட தட்ட ஒரு சில ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்து உள்ளது. இந்த கூட்டணியில் உருவான புது பேட்டை போன்று மூன்று திரைப்படங்களில் இந்த கூட்டணி இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வெளியாக உள்ளது. அதன்படி இந்த இரண்டு திரைப்படம் வெளியாகும் நிலையில் அடுத்ததாக கேப்டன் மிலர் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் கதாநாயகனாக நடிக்கிறார் மேலும் இந்தத் திரைப்படத்தை  அருண் மாதேஸ்வரன் அவர்கள் இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. அதனை பின்னர் இந்த திரைப்படத்திற்கு இசையமைபாளர் ஜி வி பிரகாஷ் அவர்கள் இசையமைத்து வருகிறார்.

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் அவர்கள் நடிக்க உள்ளார். மேலும் பூஜையுடன் தொடங்கிய கேப்டன் மிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.