நடிகர் தனுஷ் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்கள் சரிவை சந்தித்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் அதனை சரி செய்து கொண்டார் இந்த நிலையில் வெற்றிமாறன் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய தனுஷ் வெற்றி வாகை சூடி வந்தார் வெற்றிமாறனும் தனுஷும் இணையும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நன்கு ஹீட் அடித்தது.
இந்த நிலையில் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் மீது யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை இருவரும் பிரிய போவதாக தனுஷ் அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தோலுக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருக்கும் இந்த நிலையில் இப்படி ஒரு முடிவை நீங்கள் எடுக்கலாமா என பல பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் இருவரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் யார் என்ன கூறினாலும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள்.
தற்பொழுது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பல்வேறு போன் கால் வந்ததாகவும் அதனால் கடும் மன உளைச்சைக்கு ஆளானார் எனவும் தகவல் வெளியானது. மேலும் இது குறித்து ரஜினிகாந்த் தன்னுடைய சம்மந்தி கஸ்தூரி ராஜா அவர்களிடம் பேசியதாகவும் கஸ்தூரிராஜா அவர்கள் தனுஷ் இடம் 50 நிமிடம் இது குறித்து பேசியதாகவும் செய்தியாளர்களிடம் அறிவித்தார் கஸ்தூரிராஜா.
தன்னுடைய அப்பா அம்மா பிரியப் போகிறார் என்ற வருத்தம் தனுஷின் பையன்களுக்கு இருந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் எத்தனை பேர் அறிவுரை கூறியும் கேட்காத தனது அப்பா அம்மா தனுஷ் மகன் கேட்ட கேள்வியும் கூறிய பதிலும் அவர்களுக்கு பாடம் புகட்டும் என பலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் குடும்பத்தார் உன்னுடைய அப்பா அம்மா இனி பிரிய போறாங்க உனக்கு அப்பா வேண்டுமா? அம்மா வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
அதற்கு பதில் அளித்த தனுஷின் மகன் யாத்ரா இதை என்னிடம் கேட்கவே கூடாது இதை போயி என்னுடைய அப்பாவிடமும் அம்மாவிடமும் கேளுங்க என்னுடைய அப்பாவிடம் உங்களுக்கு அப்பா வேண்டுமா இல்லை அம்மா வேண்டுமா? எனக் கேளுங்கள் அதேபோல் என்னுடைய அம்மாவிடமும் உங்களுக்கு அப்பா வேண்டுமா இல்லை அம்மா வேண்டுமா என கேளுங்கள் இருவரும் என்ன பதில் கூறுகிறார்களோ அதுதான் என்னுடைய பதிலும் என கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த சிறு வயதில் இவ்வளவு மெச்சூரிட்டியாக பேசி உள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனுஷின் மகன் யாத்திரா தனுசை போல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர் அவரின் இந்த அரிவாளித்தனமான கேள்வியும் பதிலும் அனைவரையும் வியக்க வைத்தது அது மட்டும் இல்லாமல் இவர் கேட்ட இந்த கேள்வி இருவரையும் மீண்டும் ஒன்று சேர வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.