தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் மோதிக்கொண்டு இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படம் தந்து வரும் நிலையில் தற்பொழுது இவர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தினை குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு தகவல் வெளியானது. பிறகு ரவிக்குமார் இன்று நேற்று நாளை படத்தின் வெற்றினை தொடர்ந்து அயலான் திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகளுக்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்தது.
அதன் பிறகு CG வேலைகள் காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அயலான் திரைப்படம் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ரிலீஸ்சாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து அயலான் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தனுஷின் கேப்டன் மிர்லர் படமும் வெளியாக இருக்கிறது. மேலும் இவர்களுடைய படத்தினை தொடர்ந்து கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் வெளியாக வெளியிட பட குழுவினர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம். இவ்வாறு ஒரே நாளில் மூன்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் எந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது ரசிகர்கள் இந்த படங்களின் ரிலீசாக காத்து வருகின்றனர் இந்த படங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் மூன்றும் சுவாரஸ்யமான கதையாம்சத்துடன் உருவாகி இருப்பது தெரிந்த ஒன்றுதான்.