படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு ஆனால் சமீபகாலமாக இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும் அவர் கமிட்டான சில படங்களையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார். ஆனால் அதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு கம்பேக் கொடுக்க போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வகையில் இவர் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பெரிய அளவுக்கு அவருக்கு வெற்றியை கொடுக்காததால் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார் என ரசிகர்கள் கூறினார் ஆனால் சிம்புவோ தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அந்தவகையில் வெங்கட் பிரபுவுடன் இவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இந்த திரைப்படமும் திரையரங்கில் கோலாகலமாக வெளியாகியது மேலும் படம் மக்களை கவர்ந்து இழுத்தது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் சூப்பராக இருந்தது தற்போது வசூல் வேட்டையை சிறப்பாக கண்டு வருகிறது. இதுவரை 70 கோடிக்கு மேல் அள்ளி கொண்டிருக்கிறது மாநாடு. மேலும் சிம்புவுக்கு இது ஒரு சிறப்பான கம்பேக் படமாக தற்போது பார்க்கப்படுகிறது.
தமிழை தாண்டி மற்ற இடங்களிலும் சிம்புவின் மாநாடு நல்லதொரு வசூல் வேட்டையை கண்டுவருகிறது அந்த வகையில் கேரளாவில் இதுவரை சிவகார்த்திகேயனின் டாக்டர் 1.55 கோடி, தனுஷின் கர்ணன் திரைப்படம் 1.5 கோடி வசூல் செய்தது தற்போது அவர்களது படங்களின் வசூலை விட மாநாடு அதிக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
மேலும் மாநாடு திரைப்படம் இப்பொழுதும் கூட 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் வசூல் வேட்டை நடத்திய வண்ணமே இருக்கிறது. சிம்புவின் கம்பேக் தற்போது மற்ற நடிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.