சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் தனது படங்களின் மூலம் மோதிக்கொள்வார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் பலரும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க மோதிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் ஆகியவர்களை..
தொடர்ந்து தனுஷும் – சிம்புவுக்கும் எப்பொழுதுமே சினிமாவுல மிகப்பெரிய ஒரு போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். அதனால் தனுஷின் மார்க்கெட்டும் சரி சிம்புவின் மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஏன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் இதுவரை மட்டுமே சுமார் 65 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படம் இருக்கின்றன.
இந்த திரைப்படங்கள் இரண்டும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன அதுபோல சிம்புவின் திரைப்படங்களான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் சிம்பு படங்கள் மோத இருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு தனுஷ் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் பெரிய அளவில் இந்த படங்களை பார்க்க தற்பொழுது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சிம்புவின் பத்து தல திரைப்படம் தனுஷின் வாத்தி திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கிறதாம் மேலும் இந்த இரண்டு படங்களும் டிசம்பர் மாதத்தில் வெளிவரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.