ஒரே படத்தில் தனுஷ்-சிம்பு பக்கா பிளான் போட்ட வெற்றிமாறன்.! தலையில் இடியை தூக்கி போட்ட நடிகர்…

dhanush-simbu
dhanush-simbu

தேசிய விருது பெற்ற இயக்குனரான வெற்றிமாறன் அவர்கள் இயக்கத்தில் தற்போது விடுதலை திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது இந்த படத்தில் சூரி அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தற்போது விடுதலை திரைப்படம் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை என்கிற இடத்தில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் சூரி அவர்கள் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் மலைவாழ் மக்களுக்கும் போலீசுக்கும் இடையேயான பிரச்சனைகளை கதைகளத்தை கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது பாலிவுட் நடிகர்கள் டோலிவுட் நடிகர்கள் என அனைவராலும் தேடப்பட்டு வருகிறார் அந்த அளவிற்கு தனது திரைப்படத்தில் தனித்துவமான கருத்துக்களை வைத்து படமாக்கி வருகிறார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தற்போது சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகர் சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டு இருந்தார் அந்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என தெரிவித்திருந்தார் அதன் பிறகு வட சென்னை திரைப்படத்தை நடிகர் சிம்பு வைத்து இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.

வடசென்னை படத்தில் இருக்கும் ராஜன் என்கிற கதாபாத்திரத்திற்கு நடிகர் சிம்புவை தான் முதலில் தேர்வு செய்திருந்தார் வெற்றிமாறன் இந்த கதாபாத்திரம் முதலில் குமார் என்ற பெயரில் உருவானது அதன் பிறகு ராஜன் என்கிற கதாபாத்திரத்தை வைத்தனர் 40 நிமிடங்கள் மட்டும் வரக்கூடிய அந்த கதாபாத்திரம் தான் படத்தில் முக்கிய தூணாக இருந்தது. ஆனால் சிம்பு தனக்கும் பெருந்தன்மை இருக்கிறது ஆனால் அந்த அளவுக்கு இல்லை எனக் கூறி வடசென்னை வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.

நடிகர் சிம்பு அந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து இருந்தால் அவருடைய பழைய மார்க்கெட் மீண்டும் கிடைத்திருக்கும் என பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.