தமிழ் சினிமாவில் குறைந்த சம்பளம் வாங்கினாலும் தொடர்ந்து அதிக திரைப்படங்களை வருடத்திற்கு கொடுத்து ஒருவருக்கு என்னமோ நடிகர் தனுஷ்தான். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் கடினமாக உழைத்து வருவதால் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளார்.
தற்போது இவரது கையில் குறைந்தது பத்து படங்களுக்கு மேலாக தன் வசப்படுத்தி உள்ளார் மேலும் மூன்று வருடத்திற்கு தனுஷ் பிஸியாக படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு வெற்றியை நோக்கி ஓட உழைக்க ரெடியாக இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படமும் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் இருக்கிறது அந்த வகையில் அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ராயன், D 43, கிரே மேன் படங்கள் ரெடியாக இருக்கின்றன.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஒரு புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் அதாவது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷின் பின்பற்றுவோரின் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியை எட்டி உள்ளது அதை வெளிப்படுத்தும் விதமாக தனுஷ் ரசிகர்கள் இச்செய்தியை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
மேலும் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் ஆகியோர் கூட இந்த அளவிற்கு ரசிகர்கள் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையே ஓவர்டேக் செய்து தனுஷ் இந்த இடத்தை பிடித்திருப்பது தற்போது அவருடன் வெற்றியாகவே பார்க்கின்றனர் ரசிகர்கள்.