தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இதற்கு முன்பே தனுஷை வைத்து அசுரன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தனது இரண்டாவது படத்தையும் தனுஷை வைத்து தயாரித்தார்.
அந்த வகையில் கர்ணன் திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் மட்டுமே ஆகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களில் 1.43 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இந்த திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தை விட அதிகமாக வசூல் செய்து விடும் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் தெலுங்கு சினிமாவில் இருந்து சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று கூறி வருகிறார்கள். இவ்வாறு இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் தனது மகன்கலுடன் அமெரிக்காவில் கர்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் தனுஷிற்கு தற்பொழுது தீ கிரேன் மேன் என்ற ஹோலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் சமீபத்தில் அங்கிருந்து வர உள்ளாரார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.