வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன் எனக் கூறிய தனுஷ்.! வியந்து பார்க்கும் ரசிகர்கள்..

vaathi-dhanush
vaathi-dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீபத்தில் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்ததை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருந்து வருகிறார்கள். மேலும் இது குறித்து சமூக வலைதளங்களிலும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அதாவது தனுஷ் சமீபத்தில் தான் வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளார் தனுஷுக்கு இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் வியந்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் தற்பொழுது வாத்தி திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தினை வெங்கி அட்லூரி இயக்க வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி அன்று பல திரையரங்குகளில் ரிலீஸ்சாக இருக்கிறது. நடிகர் தனுஷ் இந்த படத்தில் வாத்தியாராக நடித்துள்ள நிலைக்கில் ரசிகர்கள் அதனை பார்க்க ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் கூறிய விஷயத்தை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தனுஷ் கூறியதாவது வாத்தி படம் 90களில் நடப்பது போன்று இருக்கும்.

அந்தப் படத்தில் நடித்த பொழுது நான் ஆசிரியர்களை எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொண்டேன் நம் தலையெழுத்தை மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். லாக்டவுன் நேரத்தில் தான் வங்கி என்னை தொடர்பு கொண்டு கதை சொன்னார் நான் அப்பொழுது வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தேன் என்றார்.

மேலும் வெங்கி சொல்ல வரும் கதையை எப்படியாவது மறுத்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் கதையைக் கேட்டதுமே பிடித்து விட்டது. வேறு எதுவும் பேசாமல் அப்போ டேட்ஸ் வேண்டும் என்று மட்டும் கேட்டேன் இந்த வாத்தி படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் படிப்பு என்பது பிரசாதம் போன்றது அதை 5 ஸ்டார் ஹோட்டலில் விற்பனை செய்யாதீர்கள் என்பதே வாத்தி படத்தின் கதையாகும் என்றார்.