உன்னால முடிஞ்சா அந்த படத்தை எடுத்துப் பார் கேஸ் போடுறான் தனுஷிற்கு கிடுக்கிப்பிடி போட இயக்குனர் விசு.!

dhanush-visu
dhanush-visu

விசு தமிழ் சினிமா உலகில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், கதையாசிரியர் தயாரிப்பாளர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர், இவரின் முழுப்பெயர் எம்ஆர் விஸ்வநாதன், இவர் முதன்முதலில் இயக்குனர் பாலச்சந்திரன் இடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.

சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பின்பு ரஜினி நடித்த தில்லு முல்லு திரை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார், மேலும் தமிழ் சினிமாவில் கண்மணிப் பூங்கா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து மணல்கயிறு, இரகசியம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

விசு படம் என்றால் இன்னும் பலருக்கு ஃபேவரட் தான், மேலும் இயக்குனர் விசு கடைசியாக இயக்கிய திரைப்படம் தங்கமணி ரங்கமணி, அதன்பிறகே இவர் சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், அதுமட்டுமில்லாமல் டிவி நிகழ்ச்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிலையில் நடிகர் விசு தனுஷ் மீது வழக்கு தொடர்வதாக சர்ச்சை தொடங்கியுள்ளது.

காரணம் ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு திரைக்கு வந்து மக்களிடம் நல்ல விமர்சனங்களை பற்றிய படம் நெற்றிக்கண். இந்த திரைப்படத்தில் லட்சுமி, சரிதா மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி என பலர் நடித்திருந்தார்கள், இந்த திரைப்படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார், இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் ரீமேக் செய்ய இருப்பதாகவும் இதில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் கூறி உள்ளார்கள்.

தனுஷ் இதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் தொடங்கி இருப்பதாகவும், இந்தநிலையில் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது, இந்த நிலையில் இந்த திரைப் படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது, இந்த நிலையில் படத்தை தனது அனுமதி இல்லாமல் இயக்கக் கூடாது என விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி விசுவிடம் கேட்டபொழுது தனுஷ் அந்த படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது இது எல்லாம் பொய் என்று சொன்னால் நான் கண்டுக்கவே மாட்டேன் உண்மையாக இருந்தால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கவிதாலயாவிடம் உரிமம் பெறுவதைவிட படத்தின் கதாசிரியரான  என்னிடம் வந்து கேட்பது சரியாக இருக்கும் என கூறினார்.

சினிமா
சினிமா

அதுமட்டுமில்லாமல் என்னிடம் உரிமம் பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் கண்டிப்பாக தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என கோபமாக பேசினார் இப்படி விசு பேசிய தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.