உதயநிதியின் ‘மாமன்னன்’ எப்படி இருக்கிறது.. நடிகர் தனுஷின் முதல் விமர்சனம்

dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது இவருடைய நடிப்பில் மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

மாமன்னன் திரைப்படம் தான் இவருடைய கடைசி படம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை அடுத்து கமலஹாசன் அவர்கள் ராஜ்கமல் ப்ரோடுக்ஷன் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உதயநிதியை வைத்து மேலும் ஒரு படத்தினை தயார் செய்ய இருக்கிறார்கள். எனவே இந்த படத்திற்கு உதயநிதி ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் மாமன்னன் திரைப்படம் இவருடைய கடைசி திரைப்படம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதனை அடுத்து இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்நிலையில் நாளை மாமன்னன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து தனுஷ் தனது விமர்சனத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அதில் மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜின் எமோஷன், வடிவேலு சார் மற்றும் உதயநிதி, கீர்த்தி மற்றும் பகத் பாசில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஏ.ஆர் ரகுமான் சாரின் இசை அழகாக இருந்தது கண்டிப்பாக படத்தின் இடைவேளை காட்சியில் திரையரங்கம் அதிரும் என கூறியுள்ளார். இவ்வாறு ஏற்கனவே படத்தைப் பார்த்த சில பிரபலங்கள் படம் பயங்கரமாக இருப்பதாக கூறி வரும் நிலையில் நடிகர் தனுஷ் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

dhanush
dhanush