ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து விட்டோம் என புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்.! வைரலாகும் புகைப்படம்

dhanush-cry
dhanush-cry

தமிழ் சினிமாவில் டாப் நடிகரான தனுஷ் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அசுரன், ஜகமே தந்திரம், கர்ணன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது .தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. செல்வராகவன் மற்றும் தனுஷ் இப்படத்தில் இணைவதற்கு முன் இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் நடிப்பதற்காக தனுஷிடம் ஏற்கனவே செல்வராகவன் கூறியிருந்தார்.

ஆனால் தனுஷ் மற்ற பல இயக்குனர்களின் படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினார். அது சற்று செல்வராகவனை வருத்தமடைய காரணமானது. இதை கண்டறிந்த ரசிகர்கள் செல்வராகவனுக்கும் தனுஷுக்கும் இடையே பல மோதல்கள் உள்ளதாக கூறி வந்தனர். இருந்தும் செல்வராகவன் எதை பற்றியும் வெளிப்படையாக கூறியதில்லை.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தின் வேலைகளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தனுஷ் தற்போது வாத்தி என்ற தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக தனுஷ் ஐதராபாத்தில் தங்கி இருந்தார். இதனால் சென்னை பக்கம் வர முடியாமல் போனது இந்த நிலையில் வாத்தி என்ற திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது தனுஷ் சென்னைக்கு திரும்பி உள்ளார்.

சென்னையில் தனது வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டிகளை பார்த்து அவர்களுடன் கொஞ்சி விளையாடும் பொழுது எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்துடன்  தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளோம் எசெல்லப் பிராணிகளுடன் இணைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பதிவு செய்திருந்தார்.

இவர் வெளியிட்ட அந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவித்து வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள மாறன், தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்கிற்கு வர இருக்கிறது.

dhanush
dhanush

இதோ தனுஷ் வெளியிட்ட புகைப்படம்.

dhanush
dhanush