“நானே வருவேன்” படத்தை தொடர்ந்து வில்லன்னாக நடிக்கும் தனுஷ்.? ரசிகர்கள் அதிர்ச்சி..

dhanush-
dhanush-

தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்கள் பலரும் எடுத்த உடனேயே டாப் நடிகர்கள் என்ற அந்தஸ்தை பிடிக்கவில்லை. தனது இளம் வயதில் இருந்தே ஹீரோவாக பல சிறந்த படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர்.

மேலும் இந்த நடிகர்கள் பெரும்பாலும் ஹீரோவாக மட்டுமே சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர் ஏனென்றால் ஹீரோவாக நடித்தால் மட்டுமே தனது மார்க்கெட் குறையாமல் இருக்கும் என நினைத்து வந்தனர். ஆனால் இப்போது உச்ச நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் கூட மற்ற டாப் நடிகர்களின் படங்களில்  கௌரவ வேடம் கெஸ்ட் ரோல் போன்றவற்றில் தலை காட்டி வருகின்றனர்.

அப்படித்தான் கமலின் விக்ரம் திரைப்படத்தில் கூட சூர்யா கெஸ்ட் ரோலில் வந்து மிரட்டி இருப்பார் அது அவருக்கு நல்ல ரிச்சை கொடுத்தது அதேபோல ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இதே போல நடிகர் தனுஷும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. ஆம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க உள்ள AK 62 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அதற்கு தனுஷ் சம்மதம் தெரிவிப்பார் என தெரிய வருகிறது.இந்த தகவல் தற்போது இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு பக்கத்தில் இருந்து வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..