அண்ணே நான் அப்பவே சொன்னேன் கேட்டியா… இரண்டாவது திருமணம் குறித்து வாயை திறந்து தனுஷ்..! சோள முத்தா போச்சா..

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஓடிக்கொண்டு இருப்பவர் செல்வராகவன். இவர் முதலில் எழுத்தாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் பிறகு “காதல் கொண்டேன்” என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனுஷ் உடன் கைகோர்த்து புதுபேட்டை, யாரடி நீ மோகினி..

மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை கொடுத்து  தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். திரையுலகில் இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் திடீரென நடிப்பில் ஆர்வம் காட்டினார் முதலில் கீர்த்தி சுரேஷ் இணைந்து சாணி காயிதம் படத்தில் மிரட்டினார் அதன் பிறகு விஜயின் பீஸ்ட், தனுஷின் நானே வருவேன் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த..

இவர் மோகன் ஜி உடன் சேர்ந்து பகாசூரன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது கைதட்டல் வாங்கினார் ஆதனைத் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறதாம்.. இப்படி திரை உலகில் ஜொலிக்கும் செல்வராகவன் அவ்வபோது கருத்துக்கள் உள்ள பதிவுகளை போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்.

மேலும் தனது வீட்டில் நடக்கும் சில உண்மைகளையும், வெளிப்படையாக உளறுவதை செல்வராகவன் வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி ஒரு பேட்டி ஒன்றில்   முன்னாள் மனைவி சோனியா அகர்வால் விவாகரத்து குறித்து தனுஷ் என்னிடம் சொன்னார் என்பது குறித்து வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

சோனியா அகர்வாலை விவகாரத்தை பெற்று பிரிந்த பிறகு செல்வராகவனிடம் சென்று தனுஷ் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் கடவுள் உனக்கு நல்ல ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இப்படியே இருந்து விடு “சிங்கிளாக” வாழ்நாள் முழுவதும் இரு என கூறினாராம்.  ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. கீதாஞ்சலி எனது வாழ்க்கையை மாற்றி விட்டார் என செல்வராகவன் கூறுகிறார்.