நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் தற்பொழுது வரையிலும் உலகம் முழுவதும் 94 கோடிக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தினை தனுஷின் யாரடி நீ மோகினி படத்தினை இயக்கியிருந்த மித்ரன் ஜகவர் இயக்கியிருந்தார் மேலும் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் மேலும் தங்கமகன் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை பெற்றது.
போலீஸ் அதிகாரி மகனான தனுஷ் தனது படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார் பிறகு டெலிவரி பாய்யாக வேலை செய்கிறார் இதன் காரணமாக தந்தைக்கு மகனின் மீது அதிக கோபம் இதன் காரணமாக இருவரும் மோதிக் கொள்வதும் பின்னர் தந்தையின் பாசத்தை புரிந்துக் கொண்ட மகன் சமாதானமாவதுமான சென்டிமென்ட் கதையும் மறுபுறம் மூன்று நாயகிகளில் எவரை நாயகன் திருமணம் செய்து கொள்வார் என்ற சுவாரசியமான கதைக்களத்துடனும் இந்த படம் அமைந்திருந்தது மேலும் இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டினை பெற்றது.
தனுஷின் சிறிய வயது தோழியாக நடித்து வரும் நித்யா மேனன் கடைசியில் தனுஷை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் அவர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவருடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
அந்த வகையில் தற்பொழுது ஜப்பானை சேர்ந்த இருவர் மேகம் கருகாதா பாடலுக்கு அழகாக நடனமாடி ரிலீஸ் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜப்பானில் உள்ள தனுஷ் நித்தியாமேனன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.