நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் அசுரன் மற்றும் பட்டா இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, அதிலும் அசுரன் திரைப்படம் பல சாதனையை நிகழ்த்தியது, விருதுகளையும் வாரி குவித்தது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஆடுகளம். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தனுஷ் மற்றும் படத்தைத் தயாரித்ததற்காக கதிரேசனுக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும்.
இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமையை ஆடுகளம் திரைப்படத்தை தயாரித்த கதிரேசன் கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, இந்தநிலையில் ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரித்திவிராஜ் அந்த திரைப்படத்தில் தாடி வைத்து நடித்திருப்பார். அதேபோல் தனுஷ் தாடி வைத்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.