தனுஷால் மனமுடைந்த இளம் இயக்குனர்!! மூணு வருஷமா இதே நிலைமை தான்.. மனம்திறந்த பிரபல இயக்குனர்

dhanush 02

முன்னணி நடிகரான தனுஷ் கிட்டத்தட்ட 3 வருடங்களாக பிரபல இயக்குனர் ஒருவருக்கும் தனது பட வாய்ப்பை தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதோடு கோலிவுட் வட்டாரத்திலும்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அந்த இயக்குனர் தனுஷின் மீது வருத்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் தற்போது பாலிவுட்,ஹோலிவுட் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அதோடு பல தயாரிப்பு நிறுவனங்களும் தனுஷை வைத்து திரைப்படங்கள் இயக்குவதற்கு ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான் தனுஷ் பிரபல இயக்குனர் திரைப்படத்தில் மூன்று வருடங்களாக நடிப்பதாக கூறி ஆனால் தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப் படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி வருகிறார். தற்பொழுது இவர் அவெஞ்சர்ஸ் படக்குழுவினர்கள் தயாரித்து வரும் த கிரேன் மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய படக்குழுவினர்கள் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டி 43 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு செல்வராகவன் இயக்க உள்ள புதிய படமொன்றிலும் நடிக்க உள்ளாராம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

dhanush 01
dhanush 01

இவ்வாறு பிசியாக நடித்து வரும் இவருக்கு மாரி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த பாலாஜி மோகனுக்கு தனது அடுத்த படத்தின் வாய்ப்பு உங்களுக்கு தான் என்று கூறிய தனுஷ்  கடந்த மூன்று வருடங்களாக ஏமாற்றி வருகிறாராம். இதன்காரணமாக இனிமேல் தனுஷை நம்ப வேண்டாமென்று நடிகர் சித்தார்த்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.