நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமடைந்து வருகிறார்களோ அதேபோல திரைப்படங்களை இயக்குபவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கிறது. அந்த வகையில் கோலிவுட்,ஹாலிவுட், டோலிவுட் போன்ற மூன்று மொழிகளிலும் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் தான் இயக்குனர் சேகர் கம்முலா.
இந்நிலையில் தற்போது இவர் தனது அடுத்த படத்தை தெலுங்கில் இயக்க உள்ளார். இவர் இயக்கவுள்ள தெலுங்கு திரைப்படத்தில் முதன் முறையாக தனுஷ் தெலுங்கில் நடிக்க உள்ளார். தனுஷ் தெலுங்கில் நடிக்க உள்ள முதல் திரைப்படமே பல கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஏனென்றால் தனுஷ் நடிப்பில் தொடர்ந்து வெளிவந்த அசுரன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதோடு தற்போது தொடர்ந்து இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
மற்ற நடிகர்களை விடவும் தனுஷ்தான் சமீப காலங்களாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சேகர் கம்முலா இதுவரையிலும் இவர் 20 கோடி முதல் அதிகபட்சமாக 25 கோடி வரை மட்டும்தான் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ஆனால் தனுஷ் திரைப்படத்தை மட்டும் ரூபாய் 120 கோடி பட்ஜெட்டில் உருவாக்க உள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது தற்பொழுது தனுஷ் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளதால் இயக்குனர் சேகர் கம்முலா தனுஷின் மீது அதிக நம்பிக்கை உள்ளதால் இவ்வளவு கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.