அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்திய நடிகர் தனுஷ்.! அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

dhanush-0012
dhanush-0012

சமீப காலங்களாக உலக அளவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அசுரன்,கர்ணன் இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தற்போது உள்ள அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என்று அனைவரும் தனுஷினை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்தவகையில் தனுஷும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட தற்போது இவர் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ்சாக உள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஹோலிவுட்டில் இவர் நடித்துள்ள  த கிரே மேன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷின் புதிய படம் பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வகையில் சமீப காலங்களாக தனுஷ் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. தனுஷ் அறிமுகமாக உள்ள தெலுங்கு திரைப்படத்தினை சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.இவர் ஒரு சிறந்த இயக்குனர் ஆவார் அந்த வகையில் தேசிய விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு தனுஷ் மற்றும் சேகர் கம்முலா இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடியாம் இதுவரையிலும் சேகர் கம்முலா 20 கோடி முதல் 25 கோடி வரையிலும் தான் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவ்வளவு தான் இவர் இயக்கும் ஒரு படத்தின் மொத்த பட்ஜெட் ஆனால் தற்போது தனுஷ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து உள்ளதால் தனுஷ் புதிய படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடியாக உயர்த்திள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு தனுஷ் ரூபாய் 50 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.  அந்த வகையில் இத்திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 120 கோடி என்பதால் இத்திரைப்படம் ஒரு பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.