தற்பொழுது மற்ற நடிகர்களை விடவும் ட்ரெண்டிங்கான நடிகராக சமீபகாலங்களாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்த இரண்டு திரைப்படங்களும் சமூகத்தில் ஏற்படும் பெரும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களையும் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இரண்டு திரைப்படங்களுமே தனுஷிற்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது ஹோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார்.
அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள த கிரேக் மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளில் தொடர்ந்து பல திரைப்படங்கள் அடுத்த அடுத்ததாக ரிலீசாக உள்ளது. அந்த திரைப்படங்களில் முழு லிஸ்ட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மொத்தம் 10 திரைப்படங்கள் உள்ளது. அந்த வகையில்,
1.ஜகமே தந்திரம்
2.அந்தராங்கி ரே
3.கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43
4.த கிரேக் மேன்
5.நானே வருவேன்
6.மித்திரன் ஜகஹர் – தனுஷ் கூட்டணி
7.மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி
8.ராஜ்குமார் – தனுஷ் கூட்டணி
9.வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி
10.ஆயிரத்தில் ஒருவன் – 2