அடுத்த திரைப்படத்தின் கெட்டப் இதுதானா தனுஷ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழப்பம்.!

dhanush8

சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர்கள் குறிப்பிட்ட அளவிற்கு சம்பளம் வாங்கி வந்து இருப்பார்கள். அதன் பிறகு இவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டால் தங்களை சம்பவங்களை இருமடங்கு என பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் குறிப்பிட்ட அளவிற்கு சம்பளத்தை வாங்கி வந்து தொடர்ந்து இரண்டு வெற்றி திரைப்படங்களை தந்ததால் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று உலக அளவில் கலக்கிய வருபவர்தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து தனுஷ் கிட்டதட்ட ஒன்பது திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.  இந்நிலையில் கடைசியாக இவர் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளிவந்தது. இதனை தொடர்ந்து த கிரே மேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்த தனுஷை, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகனுடன் சில நாட்கள் ஒன்றாக பொழுதை கழித்துள்ளார். இந்நிலையில் இன்று மிகவும் ஸ்டைலாக ஏர்போர்ட் வந்து இறங்கி உள்ள தனுஷின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சில ரசிகர்கள் இது புதிய படத்தின் கெட்டப்பாக இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கவுள்ள தனது 43வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவ்வாறு ஹோலிவுட்டிலும் அறிமுகமாகி தற்போது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து உலக அளவில் சினிமாவில் கலக்கி வருகிறார்.

DHANUSH 23
DHANUSH 23