தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது மேலும் தனுஷ் அடுத்ததாக புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லி என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் புதிய அப்டேட்டை தற்பொழுது பட குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்திற்கு டைட்டிலாக வாத்தி என வைத்துள்ளார்கள்.
நடிகர் தனுஷ் நேரடியாக நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக இருக்கிறது.
படத்தின் அப்டேட் உடனுக்குடன் வெளிவந்து கொண்டே இருக்கிறது அதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இதற்கு முன் தனுஷ் நடித்துள்ள மாறன் மற்றும் தி க்ரெ மேன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் விரைவில் நானே வருவேன் என்ற திரைப்படமும் உருவாக இருக்கிறது இந்த திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் பல திரைப்படங்களில் நடிப்பதால் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டம்தான் ஏனென்றால் அடுத்தடுத்து திரைப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.