தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விடுகிறது.அந்த வகையில் தற்போது விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்ததாக தனுஷ் தான் ட்ரெண்டிங்கானது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், ஹிந்தி என அணைத்து தென்னிந்தியா திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார். அந்த வகையில் தனுஷ் தற்போது ஹோலிவுட் திரைப்படமான த கிரே மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ்சாக தயார் நிலையில் உள்ளது.ஆனால் இத்திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என்று போராடி வந்தார்கள். தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது எனவே ஓடிடி வழியாக வெளியாக உள்ளது என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக நெட் பிலிம்ஸ் வழியாக வெளியாக உள்ளது. அந்தவகையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் நெட் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 45 கோடிக்கு விற்று விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனென்றால் போட்ட காசை எடுக்க வேண்டும் என்பதற்காக என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நெட் பிலிம்ஸ் நிறுவனம் தனுஷுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதால் இத்திரைப்படத்தை 17 மொழிகளில் டப் செய்ய உள்ளாகலார்கலாம் இதுவரையிலும் நாம் அனைவரும் மற்ற மொழி திரைப்படங்களை டப் செய்து பார்த்திருப்போம் ஆனால் இன்று தமிழ் திரைப்படத்திலிருந்து மற்ற மொழிகளில் டப் செய்ய உள்ளது.