அடிமேல் அடி வாங்கும் தனுஷ்.! கவலையில் ரசிகர்கள்

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வராமல் நேரடியாக OTT இணையதளத்தில் வெளியானது.

படத்தை பார்த்த பலரும் பலவிதமான எதிர்மறையான விமர்சனங்களை குவித்து வருகிறார்கள். மேலும் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருந்த திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியுள்ளது அதனால் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.

மாறன் திரைப்படத்தில் தனுஷ் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் gv பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ் நேர்மையான பத்திரிகையாளராக நடித்திருப்பார். இப்படி ஒரு அந்தர் பழைய கதையை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளதை மோசமாக விமர்சித்து வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.

இருந்தாலும் தனுஷ் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் தனுஷின் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை தனுஷ் நடிப்பில் வெளியாகிய  ஜகமே தந்திரம், அந்த ராங்கி ரே ஆகிய திரைப்படங்களும் நேரடியாக ott தளத்தில் வெளியானது ஆனால் இந்த திரைப் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் போனது.

இப்படி தனுஷ் நடித்த திரைப்படங்கள் தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்து வருவதால் தனுஷ் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். சினிமாவில் தான் சறுக்கலை சந்தித்து வருகிறார் என்றால் நிஜ வாழ்க்கையிலும் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டு தனிமரமாக நிற்கிறார்.

தனுஷ் இப்படி அடிமேல் அடிவாகி வருவதையும் தனுஷின் நிலைமையை பார்த்து ரசிகர்கள் பலரும் கவலை பட்டு வருகிறார்கள்.