நல்லவளா இருந்த வரைக்கும் போதும் என பிரபல சீரியலில் வில்லியாக மிரட்டும் தனுஷ் பட நடிகை..! அதுவும் இந்த மெகாஹிட் சிரியலிலா..?

dhanush

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம் தான் திருடா திருடி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாயா சிங்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா என்ற பாடல் ஆனது ரசிகர் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்துவிட்டது இதன் மூலமாக நமது நடிகை இளைஞர்கள் மனதில் கொடிகட்டி பரக்க ஆரம்பித்துவிட்டார்.

மேலும் தான் அடித்த முதல் திரைப்படமே ஹிட் கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த திரைப்படங்களில் ஏராளமாக நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தார்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு சன் டிவியில்  மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான நாகம்மா என்ற சீரியலில்  அறிமுகமாக ஆரம்பித்தார்.

இவ்வாறு இந்த சீரியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தெய்வமகள் சீரியலின் மூலமாக புகழ் பெற்ற பிரபல நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார்.  இவ்வாறு தனது திருமணத்திற்கு பிறகு ஆக ஆனந்தபுரத்து வீடு, இது கதிர்வேலன் காதலன், பவர் பாண்டி, உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பூவேஉனக்காக என்ற சீரியலிலும் இவர் தற்சமயம் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நமது நடிகை சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்காமல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன்காரணமாக இந்த சீரியலின் டிஆர்பி எகுறியது மட்டுமல்லாமல் அடுத்த நாள் என்ன கதையாக இருக்கும் என ரசிகர்கள் ஏக்கத்துடன் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

saya singh
saya singh