சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் சில காரணங்களால் ஒரு சில நல்ல கதைகளை தவறவிடுவது வழக்கம் அந்த வகையில் ஒரு முக்கியமான படத்தை நடிகர் தனுஷ் தவற விட்டு உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமா உலகில் காதல் மற்றும் ஆக்சன் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர்.
ஒரு முறை ஒரு சூப்பரான கதையை கையில் வைத்து கொண்டு சுத்தி இருக்கிறார் அந்த கதையை ஒரு தடவை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிடம் சொல்லி உள்ளார் ஆனால் அவருக்கு அந்த கதை பிடிக்கவில்லை பிறகு இந்த கதையை தமிழில் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து தனுஷிடம் அந்த கதையை கூறி உள்ளார்
தனுஷுக்கு கிளைமாக்ஸ் காட்சி பிடிக்கவில்லை.. அதேசமயம் தனுஷுக்கு கால் சீட்டு பிரச்சனையும் அப்பொழுது இருந்ததால் அந்த படத்தில் நடிக்கவில்லை பிறகு அந்த கதையை ஓரம் வைத்து விட்டு சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுக்க முற்பட்டார் அந்த சமயத்தில் தான் நடிகர் சிம்புவை சந்தித்தார்..
உடனே இந்த கதையை நிறுத்திவிட்டு வெண்ணிலவே வெண்ணிலவே.. கதையை சிம்புவிடம் சொல்லி உள்ளார்.. இதைக் கண்ட ஒளிப்பதிவாளர் பரமஹம்சரா வெண்ணிலவே வெண்ணிலவே டைட்டில் நல்லா இல்லை விண்ணைத்தாண்டி வருவாயா டைட்டில் வைத்துக் கொள்ளலாம் என கூற பின் படமாக உருவாக்கப்பட்டது.
படம் நல்லபடியாக எடுக்கப்பட்டு படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹீட் அடித்தது இந்த படம் கௌதம் மேனனுக்கும் சரி சிம்புவும் சரி நல்ல பெயரை பெற்று தந்தது அதன் பிறகு தான் தனுஷுக்கே தெரியும் இப்படி ஒரு நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோம் என வருத்தப்பட்டாராம்..